பொதுவாக எல்லோரும் பேருந்தில் சில சுவாரஸ்யமான சம்பவங்கள், நமக்கு நடந்த சில நிகழ்வுகளை ஞாபகப்படுத்தும். இந்த 'ஏக் பிரியாணி' என்ற வலைப்பதிவில் நான் ஒவ்வொறுமுறையும் பேருந்தில் பயணிக்கும்போதும் வடநாட்டவர்கள் அவர்கள் மொழியில் 'ஏக் டிக்கெட்' என்று கேட்கும் பொழுது என் முகத்தில் ஒரு சிறு புன்னகை மலறும் அதற்க்கு காரணம் என் நண்பனுக்கு நடந்த ஒரு நிகழ்வு. என் நண்பனுக்கு நடந்த சம்பவத்தை இந்த 'ஏக் பிரியாணி' என்னும் வலைப்பதிவில் பதித்துள்ளேன். இந்த நிகழ்வை பற்றி கூறுவதற்குமுன்னால் என் நண்பனிடமிருந்து பதிப்புரிமை வாங்கிய பின்னே இந்த வலைப்பதிவை வெளியிடுகிறேன்.என் நண்பனுக்கு கான்பூரிளிருந்து நேர்முகத்தேர்வுக்கான அழைப்பிதழ் வந்திருந்தது. கான்பூர் உத்தர்பிரதேஷ் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். என் நன்பம் தமிழ்நாட்டை தாண்டி எங்கும் பயணித்ததில்லை. அவனுக்கு வேறுமொழிதெரியாத இடத்திற்கு எப்படி போவது என்ற தயக்கம் இருந்தது. இருப்பினும் அவன் இணையதளத்தின் முலம் பயணச்சீட்டை முன்பதிவு செய்து அவன் பயணத்தை ஆரம்பித்தான். என் நண்பன் அவன் மீது அளவுகடந்த தன்னம்பிக்கை வைத்திருப்பான். ஒரு வழியாக நேர்முகத்தேர்வை முடித்துவிட்டு அன்று இரவு ரயிலில் பயணத்தை தொடங்கினான். இரவு சுமார் 8:30 மணியளவில் பசிஎடுத்தது. அவன் ரயிலில் உள்ள (Pantry) உணவு கூடத்திற்கு சென்று என்னென்ன உணவு உள்ளது என்று உணவு கூடத்தில் ஒட்டப்பட்டிருக்கும் உணவு மற்றும் அதன் விலை பட்டியலை பார்த்து விட்டு 'ஏக் (एक) பிரியாணி' என்று இந்த்தியில் கேட்டான். அந்த வியாபாரி ஒரு பொட்டலத்தை கொடுத்துவிட்டு 40 ரூபாவை பெற்றுகொண்டான். இவனுக்கு ஒரு சந்தேகம், அந்த விலை பட்டியாலில் ஒரு பிரியாணி பார்சல் ரூபாய் 35 என்று அச்சடிக்கப்பட்டிருந்தது. இவன் நம்மிடம் 40 ரூபாய் வாங்கிவிடானே என்று ஏக்கத்தோடு தன் இருக்கைக்கு சென்று பொட்டலத்தை பார்த்தால்! என் நண்பனுக்கு அந்த வியாபாரி 40 ரூபாய் வாங்கியதற்கான விடை கிடைத்தது. அது வேறொன்றும் இல்லை என் நண்பன் வியாபாரியிடம் "ஏக் (एक) (தமிழில் 'ஒரு') பிரியாணி" என்று கேட்டது அவனுக்கு "எக் (egg) (தமிழில் 'முட்டை') பிரியாணின்னு" கேட்டுவிட்டது. அதனால் அந்த வியாபாரி 'எக் (egg) பிரியாணி' ஒரு பொட்டணத்தை எடுதுக்கொடுத்துவிட்டன். அதையும் சாப்பிட்டுவிட்டு சென்னைக்கு வெற்றிகரமாக திரும்பியாதும் எங்களிடம் இந்த நிகழ்வை சொன்னபோது நங்கள் விழுந்து விழுந்து சிரித்தோம். இந்த வலைப்பதிவை படிக்கும் பொது நீங்கள் விழுந்து விழுந்து சிரிக்காட்டாலும், உங்கள் முகத்தில் சிறு பொன்னகை பூக்கும் என்ற நம்பிக்கையில் இந்த வலைப்பதிவை முடிக்கிறேன்.
இந்த வலைப்பதிவை முடிக்கும் பொழுது என்னக்கு 'பாஸ் (எ) பாஸ்கரன்' படத்தில் சந்தானம் செய்த நகைச்சுவை நினைவில் தொன்றியாது. அந்த படத்தில் ஆர்யா நயன்தாராவிடம் எதாவது சொல்லும்போது அவள் ஆங்கிலத்தில் படன் (pardon) என்று சொல்லுவால் அவனுக்கு pardon க்கு அர்த்தம் தெரியாது. ஆர்யா உடனே சந்தானத்திடம் pardon க்கு அர்த்தம் சொல்லுடா என்று தொந்தரவு செய்வான், அதற்க்கு சந்தானம் உன்னைய பாடசொல்லுராடா என்று தப்பாக சொல்லி அனுப்பிவிடுவான். அதை நம்பி, நயன்தாரா ஆங்கிலத்தில் படன் (pardon) என்று சொன்னதும் ஆர்யா சினிமா பாட்டு பாடி அவமானப்பட்டுவிடுவான். கடைசியில் சந்தானத்திற்கு உண்மைதேரியவந்ததும் அவன் சொல்லும் வசனம் (i think she speaks British english)
அதேப்போல் என் நண்பனும் கான்பூர் இந்தி பேசி இருப்பானோ?
ak gaume ek kisan raghu thatha ............
ReplyDelete