Monday, March 17, 2014

குழந்தை

    குழந்தை எவ்வளவு அழகான தமிழ் சொல்!. அவர்கள் ஒரு வித வசிகரிக்கும் தன்மை உடையவர்கள். ஒரு குடும்பத்துக்குள் ஒரு குழந்தை வந்துவிட்டால், பௌர்ணமி நிலவு ஒளிர்வது போல அந்த குடும்பமே ஒளிரும். அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் தனக்கு இருக்கும் பிரச்சனைகளை ஒதுக்கி விட்டு, அந்த குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் கண்டு ரசிப்பார்கள். அதுவும்  அந்த குழந்தை லேசா சிரித்தாள் போதும், அந்த குடும்பத்தினர் பெறும் மகிழ்ச்சியானது, எதனோடும் ஒப்பிட முடியாத பெரும்மகிழ்ச்சியை அடைவர். அந்த குழந்தையின் வரவால் அந்த  குடும்பத்தில் உள்ள அனைவரின் எண்ண ஓட்டங்கள் தலை கீழாக மாறும். அந்த குழந்தையின் அப்பா அம்மாக்கு வாழ்கையில் ஒரு பிடிப்பு கிடைக்கும். அவர்கள் என்ன செய்தாலும்  குழந்தையை நினைவில் வைத்தே செய்வார்கள். குழந்தயின் தாத்தா பாட்டிக்கோ தங்கள் மேல் ஏறி விளையாட ஆள் வந்திருச்சினு, குழந்தை கேட்டதை வாங்கி கொடுக்கிறதுக்கு, இவ்வளவு  காலம் சேர்த்து வைத்த பணத்தை தண்ணியாக செலவு செய்வார்கள்.
 
    இத்தகய குழந்தைகள் எனக்குள்ளும் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. ஒரு நாள், என் இயலாமையின் காரணமாக, என் மேல் எனக்கு கோபம், எரிச்சால் வந்தது. இந்த
கோபத்தையும்  எரிச்சலையும் என் அப்பா, அம்மா, தங்கை, நண்பர்கள் என அனைவர் மேலும் காட்ட துவங்கினேன். இந்த சூழ்நிலையில் எனக்கு யாராவது நல்லது செய்தாலும், அது எனக்கு தப்பாக  தெரிந்தது. இந்நிலையில் அமைதிக்காக  வடபழனி முருகன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டேன். பின்னர் அந்த கோயிலில் உள்ள ஒரு தூணில் சாய்ந்து கண்ணைமூடி உட்கார்ந்தேன்.  யாரோ என் இடது தோளில் தட்டிட்டு போனாங்க. நான் கோபத்தோட சுற்றி பார்த்தேன் ஆனால் யாரும் அங்கு இல்லை. மறுபடியும் யாரோ என் வலது தோளில் தட்டிட்டு போனாங்க.  இம்முறை தூணுக்கு பின்னல் எட்டி பார்த்தேன், குட்டி தேவதை போல் ஒரு குழந்தை சிறு புன்னகையோடு,  கண்மூடி இருந்த என்னுடன் கண்ணாம்மூச்சி விளையாடி கொண்டிருந்தது. நான்  பார்த்ததும்  அந்த குழந்தை, வேகமாக ஓடிபோய் தன் அம்மா மடியில் படுத்து கொண்டது. பின்னர் தலையை தூக்கி நான் அதை பார்கிறேனா? என்று பார்த்துகொண்டது. இப்போது  இருவரும் கண்ணாம்மூச்சி விளையாட ஆரம்பித்துவிட்டோம். சில நிமிடங்களுக்கு பின்னால் கோவிலை விட்டு வெளியே வந்த பிறகுதான் என்னை நானே உணர்ந்தேன், என் மனதில்  எந்த  ஒரு கோபமும், எரிச்சலும் இல்லை, மனது தெளிந்த நீரோடை போல தெளிவாக இருந்ததை உணர்ந்தேன். நான் தூங்க போவது வரை அந்த குழந்தையின் விளையாட்டு என் கண்ணை  விட்டு அகலவில்லை. மறுநாளை மகிழ்ச்சியுடன் தொடங்கினேன். அந்த மகிழ்ச்சியில், சின்ன சின்ன விஷயங்கள் கூட அவ்வளவு  அழகாக தெரிந்தது. என் தவறுகளை நான் உணர்ந்தேன்,  தவறு செய்தவர்களை மன்னிக்க தோணியது, எதிரி கூட நண்பனாய் தெரிந்தான், தீர்க்கப்படாத பிரச்னைக்கு விடை கிட்டியது, ஒரு புது நம்பிக்கை வந்தது, எனக்கே நான் அழகாய்  தெரிந்தேன். அப்பொழுது தான் எனக்கு
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு”. என்ற  குரலுக்கான அர்த்தத்தை உணர்ந்தேன்.

    இந்த பதிப்பை என் அம்மாவிடம் வாசித்து காட்டினேன். அம்மா உடனே எனக்கும் இதே போல் நடந்திருக்கு டா… ஒரு நாள் விட்டில் உள்ள பிரச்சனையை யோசிச்சி குழம்பி  போயிருந்தேன். அப்ப நம்ம பக்கத்து விட்டு சின்ன பையன் மனோ திடிர்னு காலையில ஸ்கூல் யூனிபார்ம் போட்டு வந்தான்.
நான் தெரியாத மாதிரி “இது என்ன டிரஸ் டா?” கேட்டேன்
அதுக்கு மனோ “ஆச்சி நான் இன்னைக்கு ஸ்கூல் போறேன் அதான் யூனிபார்ம் டிரெஸ் போட்டிருக்கிறேன்.” என்றான்,
“கழுத்துல எதோ கட்டிருக்க? அது எதுக்குடா?” என்று கேட்டேன்.
அதற்க்கு அவன் “ஆச்சி… இதுவா…டை ஆச்சி, என்ன... அப்பா ஸ்கூல்ல விட்டதும் நான் அழுவேன்லா அப்ப இத வச்சி தொடச்சிக்குவேன் ஆச்சி... என்று சொன்னது எனக்கு சிரிப்பு வந்திருச்சி. அவன் போன பிறகும் நான் அதை  நினைத்து சிரித்து கொண்டிருந்தேன் டா… அவன் பண்ணிய காமெடியில எல்லா பிரச்சனையும் மறந்துபோச்சிடா என்று என் அம்மா  சொன்னாங்க. 

    சிறிது நேரம் கழித்து அம்மா என்னை அழைத்து, உனக்கு தெரியும்லா, தாத்தாவுக்கு சாப்பாடு பரிமாறும் போது, அன்னக்கரண்டியால் தான் பரிமாறனும் அதுவும் வலது கையில் தான்  பரிமாறனும், சாப்பாட்டில் சின்ன முடி கிடந்தால் கூட தட்டு பறக்கும். உனக்கு ஒரு வயசா இருக்கும். அப்போது  நீ தாத்தா சாப்பிடும் பொது உன் கையால் தாத்தா தட்டில் இருந்த சாதத்தை  கிளரி கொண்டிருந்தாய். தாத்தா எதுவும் சொல்லாமல் அமைதியா சாப்பிட்டு கொண்டிருந்தாங்க, நான் உன்னை வேகமாக தூக்க போனேன், அதற்கு தாத்தா “எங்க அய்யா அருமையா  சாப்பிடறாங்க, சாப்பிடட்டும், நான் பார்த்துகிறேன் மா…” என்று சொன்னதும். எங்க எல்லோருக்கும் ஒரே ஆச்சர்யம். உன்னால உன் தாத்தாவுக்குள் சில நல்ல மாற்றங்கள் ஏற்ப்பட்டது என்று அம்மா பெருமையாக  சொன்னதும்  எனக்கு பள்ளியில் படித்த
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்,
சிறுகை அளாவிய கூழ்”. என்ற திருக்குறள் நினைவுக்கு  வந்தது

"கள்ளம், கபடம் இல்லாத குழந்தையின் சிரிப்பில், நம் உள்ளக் கலக்கங்கள் மறைந்துபோகும். அதுவும் நாம் தோற்று, குழந்தைகளை வெற்றி பெற செய்வதில் கிடைக்கும் சந்தோசம், வேறு  எதிலும் இல்லை".

2 comments:

  1. i think ur way of writing has improved a lot.“அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்,
    சிறுகை அளாவிய கூழ். I like this kural so much. thanks for reminding me. actually i remember the second line. i was trying to recollect the first line for long time. and yes kids add colour and so much of meaning to our life.Nice that U mentioned about ur mom. I should have typed this in tamil but since the internet is too slow to use transliteration i am typing in English. Ur spelling mistakes have decreased but here and there they exist. for instance, check the spelling of குறள். and it is a usual thing that happens to me too often that too when we type Tamil through English. Good going chezhian:)

    ReplyDelete