
நினைவலை தொடர்கிறது...
எனக்கு இரண்டு வயது இருக்கும், தெளிவாக பேசவராது. என் பாட்டி வீடு பணகுடி என்னும் ஊரில் உள்ளது. விடுமுறை நாட்களில் என் பாட்டி வீட்டுக்கு செல்வோம். அங்கு எனக்கு ஒரு மாமா உண்டு அதாவது அம்மாவின் தம்பி, அவங்க நாகர்கோவிலில் உள்ள கல்லூரியில் படித்துகொண்டிருந்தாங்க. தினமும் மாலை என் மாமா கல்லூரி முடிந்து வீட்டிற்க்கு வந்ததும், என்னை என் பாட்டியும் அம்மாவும் எனக்கு அலங்காரம் செய்து, என் மாமாவுடன் வெளியே அனுப்பிவிடுவார்கள், ஏன் என்றால் நான் அம்மாவை ஒரு வேலையும் செய்யவிடமாட்டேன்.
என் மாமா நண்பர்கள் எங்கள் வீட்டிற்க்கு வருவார்கள், அவர்களோடு நானும் என் மாமாவும் சைக்கிளில் ஒரு பாலத்துக்கு செல்வோம் அந்த பாலம் திருநெல்வேலி - நாகர்கோவில் நெடுஞ்சாலையில், ஹனுமான் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. அந்த பாலத்தில் அமர்ந்து அரட்டை அடிப்பது வழக்கம். இப்படியாக பல மாதங்கள் சென்றன. ஒருநாள் என் மாமா நண்பர்கள் என்னை ஒரு வீட்டை காண்பித்து அது தான் உன் அத்தை வீடு. அத்தைனு கூப்பிடு என்று என்னை வற்புறுத்துவார்கள். நானும் அத்தைனு குப்பிடேன். என் மாமாவின் நண்பர்களில் ஒருவர் நீ கூப்பிடுவது அத்தைக்கு கேட்கவில்லை, நீ இன்னும் கத்தி கூப்பிடு என்று சொல்லி என்னை கட்டாயப்படுத்துவார்கள். அவர்கள் சொன்னதையெல்லாம் நானும் செய்தேன். இந்த நிகழ்வு தொடர்ந்தன...
ஒரு முறை நெஞ்சுச்சளி அதிகமாக இருந்ததால் மருத்துவரின் ஆலோசனை படி எனக்கு எக்ஸ்-ரே எடுக்க என் பாட்டி திருநெல்வேலிக்கு அழைத்து சென்றார்கள். அப்போது நான் சென்ற பேருந்து அந்த பாலத்தை கடந்த போது என் பாட்டியை அழைத்து, அது தான் அத்தை வீடு என்று சொன்னேன், பாட்டிக்கு ஒன்றும் புரியல. நம் உறவினர்கள் யாரும் இங்கு இல்லையே என்று, நான் சொல்வதை பெரிது படுத்தவில்லை. சில நாட்கள் இரவு அழுதுகொண்டிருந்தேன், என்னை சமாதனம் செய்வதற்காக என்னை தூக்கிக்கொண்டு கதை சொன்னார்கள். பின்னர் என் பாட்டி கேட்ட ஒரு கேள்விக்கு, நான் அளித்த பதில் எங்கள் குடும்பத்தை அதிர்ச்சியடைய செய்தது. அது வேறொன்றும் இல்லை. மாமாவும் நீயும் எங்கெல்லாம் போனிங்க? அதர்க்கு நான் வீட்டில் இருந்து கிளம்பியது முதல் வீடு திரும்பும் வரை எங்கெல்லாம் சென்றேனோ அந்த இடத்தையெல்லாம் சொல்லிவிட்டு, கடைசியாக அத்தை வீட்டுக்கு போனேன்னு சொன்னேன். அதற்கு என் பாட்டி "எந்த அத்த வீடு டா ?" என்று கேட்டாங்க. அதர்க்கு நான் 'அன்று பேருந்தில் போகும் போது காண்பித்தேனே அந்த பாலத்துக்கு பக்கத்தில, அந்த வீட்டுல நாலு தென்னை மரங்கள் இருந்ததே...!. அடுத்து என் பாட்டி 'யாருடா உனக்கு அத்த வீடுனு சொன்னது?' அதர்க்கு நான் 'மாமா பிரெண்டு நீலகண்டன்' தான் பாட்டி. அதன் பிறகு மகா யுத்தம் மூன்று மாதத்திற்கு தொடர்ந்தது. அந்த நேரம் என் அப்பாவுக்கு சங்கரநயினார்கோவிலுக்கு பணி இடம் மாற்றம் கிடைத்தது. இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவருவதற்கு என் மாமாவை உடனே என் மாமாவை மேற்படிப்புக்காக சங்கரநயினார்கோவில் பக்கத்தில் உள்ள கல்லூரியில் சேர்த்துவிட்டார்கள். பின்னர் என் தந்தையின் மேற்பார்வையில் எங்களுடன் இருந்து படிப்பை தொடர்ந்தார். இவ்வளவு பிரச்சனைக்கும் காரண கர்த்தா நான்தான் என்று பல வருடங்களுக்கு பின்னர் தெரிய வந்தது.
பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள், நானும் என் மாமாவும் இரு சக்கர வாகனத்
"நீ சின்னப்பையனாக இருக்கும் போது, என் நம்பன் நீலகண்டன் ஒரு பெண்ணை பார்த்து அத்தை என்று கூப்பிடசொன்னானே ஞாபகம் இருக்குதா?" என்று மெதுவாக கேட்டார்.
"ஆமா! எனக்கு ஞாபகம் இருக்குது மாமா!"
"அவங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா மாமா?" என்று தயக்கத்தோடு வினவினேன்.
அதர்க்கு என் மாமா.
"ஒரு நாள் என் வண்டிக்கு பெட்ரோல் போட போனேன் அங்க அவள் கணவனோட வந்தா"
"என்னைபார்தவுடன் தான் கணவனிடம் சொல்லிவிட்டு என் அருகில் வந்து"
"நீ எப்படி இருக்க சரவணா?"
"உனக்கு எந்தனை குழந்தைகள் உள்ளார்கள்?"
"குழந்தைகள் பள்ளிக்கு செல்கிறார்களா?"
"உன் மனைவி எப்படி இருக்காங்க?"
"உன் மனைவி வேலை பார்க்கின்றார்களா?"
என்று பல கேள்விகளை வினவியதாகவும், பின்னர் அந்த பெண்ணின் கணவரும் மாமாவை விசாரித்துவிட்டு சென்றதாக என்னிடம் சொன்னார். சில வினாடிகளுக்கு பிறகு, எதற்சையாக வண்டியின் கண்ணாடியில் என் மாமா முகத்தை பார்த்தேன், ஒரு விதமான சோகமும், கண்களில் கண்ணீர் தேம்பி நிற்ப்பதை காணமுடிந்தது. அப்போதுதான் நான் தப்பு செய்துவிட்டோமோ? என்ற சிறு உறுத்தல் என் மனதில் உண்டாகியது. இரண்டு நாட்களுக்கு பிறகு என்னுள் ஒரு கேள்வி எழுந்தாது, அது வேறு ஒன்றும் இல்லங்க...
"நமக்கு ஏன் ஒரு பொன்னும் செட்டாக மட்டங்குது?"
அதற்க்கான விடை நான் சொல்லியா உங்களுக்கு தெரியனும் ?...
"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்..."
சுபம் ...........................
No comments:
Post a Comment