Monday, June 27, 2011

காதல் கதை

இன்று என் அலுவலகத்தில் நடந்த ஒரு நிகழ்வு நான் சிறு வயதில் செய்த சேஷ்டையா அல்லது தவறானு தெரியல என் நினைவலைகளாக என் நினைவில் சென்றன. எப்பொழுதும் போல இன்று காலை என் அலுவலகத்துக்கு சென்றேன். அங்கு என்கூட கல்லூரியில் படித்த நண்பன் என்னுடன் வேலைபார்த்து வருகிறான். அவன் தன் அக்கா பையன எங்கள் அலுவலகத்துக்கு அலைத்துவந்திருந்தான். அவனுக்கு இரண்டிலிருந்து முன்று வயதுக்குள் இருக்கும். அவனை வைத்துக்கொண்டு கல்லூரியில் நடந்த சில நிகழ்வுகளை பேசிக்கொண்டிருந்தோம் அப்போது. அவன் நங்கள் பேசுவதை உற்று பார்த்துக்கொண்டிருந்தான். நான் அந்த சிறுவனை பார்த்து என்ன டா விட்டுக்கு போணுமா என்று கேட்டேன் அதற்க்கு அவன் வேண்டாம் என்று தலையை ஆட்டினான். உடனே என் நண்பன் சிறுவனை வீட்டில் விட்டிட்டு வருகிறேன் என்று சென்றான், அதற்க்கு நான் நண்பனிடம் "அவன்தான் இருக்கேன்னு சொல்லுறானே எதற்க்காக வீட்டில் விடபோகிறாய்?" என்று கேட்டேன். அதர்க்கு அவன் சொல்லிய பதில் என்னை திகைக்க வைத்தது. அது என்ன வென்றால் ஒருநாள் சிறுவனை வண்டியின் முன்னாள் அமரவைத்து அவன் நண்பன் விட்டிற்கு அழைத்து சென்றிருக்கான். அங்கு அவன் நண்பர்களிடம் மதுபானம் கிங்பிஷேர் அருந்துவதை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள் போல் இருக்குது. அவர்கள் உரையாடுவதை உற்று கவனித்திருப்பான் போலிருக்கிறது. அன்று இரவு என் நம்பன், அவன் நண்பர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டான். அந்த நேரம் பார்த்து அந்த சிறுவன் எனக்கும் கிங்பிஷேர் வேண்டுமென்று கத்தி அழுதிருக்கிறான். அந்த சிறுவனுக்கு எப்படி மதுபானத்தின் பெயர் தெரிந்தது என்று விசாரித்ததில், அவன் சொல்லிய பதில்கள், என் நண்பனின் குடும்பத்தினர் அதிர்ந்து போனார்கள். பின்னர் அந்த சிறுவனை சமாதானப்படுத்தி உண்மையை கரந்துவிட்டார்கள். அப்புறம் அவனுக்கு கும்பாபிசேகம் தான்...

நினைவலை தொடர்கிறது...
எனக்கு இரண்டு வயது இருக்கும், தெளிவாக பேசவராது. என் பாட்டி வீடு பணகுடி என்னும் ஊரில் உள்ளது. விடுமுறை நாட்களில் என் பாட்டி வீட்டுக்கு செல்வோம். அங்கு எனக்கு ஒரு மாமா உண்டு அதாவது அம்மாவின் தம்பி, அவங்க நாகர்கோவிலில் உள்ள கல்லூரியில் படித்துகொண்டிருந்தாங்க. தினமும் மாலை என் மாமா கல்லூரி முடிந்து வீட்டிற்க்கு வந்ததும், என்னை என் பாட்டியும் அம்மாவும் எனக்கு அலங்காரம் செய்து, என் மாமாவுடன் வெளியே அனுப்பிவிடுவார்கள், ஏன் என்றால் நான் அம்மாவை ஒரு வேலையும் செய்யவிடமாட்டேன்.

என் மாமா நண்பர்கள் எங்கள் வீட்டிற்க்கு வருவார்கள், அவர்களோடு நானும் என் மாமாவும் சைக்கிளில் ஒரு பாலத்துக்கு செல்வோம் அந்த பாலம் திருநெல்வேலி - நாகர்கோவில் நெடுஞ்சாலையில், ஹனுமான் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. அந்த பாலத்தில் அமர்ந்து அரட்டை அடிப்பது வழக்கம். இப்படியாக பல மாதங்கள் சென்றன. ஒருநாள் என் மாமா நண்பர்கள் என்னை ஒரு வீட்டை காண்பித்து அது தான் உன் அத்தை வீடு. அத்தைனு கூப்பிடு என்று என்னை வற்புறுத்துவார்கள். நானும் அத்தைனு குப்பிடேன். என் மாமாவின் நண்பர்களில் ஒருவர் நீ கூப்பிடுவது அத்தைக்கு கேட்கவில்லை, நீ இன்னும் கத்தி கூப்பிடு என்று சொல்லி என்னை கட்டாயப்படுத்துவார்கள். அவர்கள் சொன்னதையெல்லாம் நானும் செய்தேன். இந்த நிகழ்வு தொடர்ந்தன...

ஒரு முறை நெஞ்சுச்சளி அதிகமாக இருந்ததால் மருத்துவரின் ஆலோசனை படி எனக்கு எக்ஸ்-ரே எடுக்க என் பாட்டி திருநெல்வேலிக்கு அழைத்து சென்றார்கள். அப்போது நான் சென்ற பேருந்து அந்த பாலத்தை கடந்த போது என் பாட்டியை அழைத்து, அது தான் அத்தை வீடு என்று சொன்னேன், பாட்டிக்கு ஒன்றும் புரியல. நம் உறவினர்கள் யாரும் இங்கு இல்லையே என்று, நான் சொல்வதை பெரிது படுத்தவில்லை. சில நாட்கள் இரவு அழுதுகொண்டிருந்தேன், என்னை சமாதனம் செய்வதற்காக என்னை தூக்கிக்கொண்டு கதை சொன்னார்கள். பின்னர் என் பாட்டி கேட்ட ஒரு கேள்விக்கு, நான் அளித்த பதில் எங்கள் குடும்பத்தை அதிர்ச்சியடைய செய்தது. அது வேறொன்றும் இல்லை. மாமாவும் நீயும் எங்கெல்லாம் போனிங்க? அதர்க்கு நான் வீட்டில் இருந்து கிளம்பியது முதல் வீடு திரும்பும் வரை எங்கெல்லாம் சென்றேனோ அந்த இடத்தையெல்லாம் சொல்லிவிட்டு, கடைசியாக அத்தை வீட்டுக்கு போனேன்னு சொன்னேன். அதற்கு என் பாட்டி "எந்த அத்த வீடு டா ?" என்று கேட்டாங்க. அதர்க்கு நான் 'அன்று பேருந்தில் போகும் போது காண்பித்தேனே அந்த பாலத்துக்கு பக்கத்தில, அந்த வீட்டுல நாலு தென்னை மரங்கள் இருந்ததே...!. அடுத்து என் பாட்டி 'யாருடா உனக்கு அத்த வீடுனு சொன்னது?' அதர்க்கு நான் 'மாமா பிரெண்டு நீலகண்டன்' தான் பாட்டி. அதன் பிறகு மகா யுத்தம் மூன்று மாதத்திற்கு தொடர்ந்தது. அந்த நேரம் என் அப்பாவுக்கு சங்கரநயினார்கோவிலுக்கு பணி இடம் மாற்றம் கிடைத்தது. இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவருவதற்கு என் மாமாவை உடனே என் மாமாவை மேற்படிப்புக்காக சங்கரநயினார்கோவில் பக்கத்தில் உள்ள கல்லூரியில் சேர்த்துவிட்டார்கள். பின்னர் என் தந்தையின் மேற்பார்வையில் எங்களுடன் இருந்து படிப்பை தொடர்ந்தார். இவ்வளவு பிரச்சனைக்கும் காரண கர்த்தா நான்தான் என்று பல வருடங்களுக்கு பின்னர் தெரிய வந்தது.

பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள், நானும் என் மாமாவும் இரு சக்கர வாகனத்
தில் கன்னியாக்குமரிக்கு அதே நெடுஞ்சாலையில் பயணித்தோம். அவரும் நானும் பேசிக்கொண்டே சென்றோம், நான் முன் குறிப்பிட்ட பாலம் வந்ததும் என் மாமா திரும்பி திரும்பி அந்த பெண்ணின் வீட்டை பார்த்துக்கொண்டே இருசக்கர வாகனத்தை ஓட்டினார். நானும் கண்டு கொள்ளாமல் இருந்தேன், அப்போது என் மாமா,

"
நீ சின்னப்பையனாக இருக்கும் போது, என் நம்பன் நீலகண்டன் ஒரு பெண்ணை பார்த்து அத்தை என்று கூப்பிடசொன்னானே ஞாபகம் இருக்குதா?" என்று மெதுவாக கேட்டார்.
"
ஆமா! எனக்கு ஞாபகம் இருக்குது மாமா!"
"
அவங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா மாமா?" என்று தயக்கத்தோடு வினவினேன்.

அதர்க்கு என் மாமா.
"
ஒரு நாள் என் வண்டிக்கு பெட்ரோல் போட போனேன் அங்க அவள் கணவனோட வந்தா"
"
என்னைபார்தவுடன் தான் கணவனிடம் சொல்லிவிட்டு என் அருகில் வந்து"
"
நீ எப்படி இருக்க சரவணா?"
"
உனக்கு எந்தனை குழந்தைகள் உள்ளார்கள்?"
"
குழந்தைகள் பள்ளிக்கு செல்கிறார்களா?"
"
உன் மனைவி எப்படி இருக்காங்க?"
"
உன் மனைவி வேலை பார்க்கின்றார்களா?"

என்று
பல கேள்விகளை வினவியதாகவும், பின்னர் அந்த பெண்ணின் கணவரும் மாமாவை விசாரித்துவிட்டு சென்றதாக என்னிடம் சொன்னார். சில வினாடிகளுக்கு பிறகு, எதற்சையாக வண்டியின் கண்ணாடியில் என் மாமா முகத்தை பார்த்தேன், ஒரு விதமான சோகமும், கண்களில் கண்ணீர் தேம்பி நிற்ப்பதை காணமுடிந்தது. அப்போதுதான் நான் தப்பு செய்துவிட்டோமோ? என்ற சிறு உறுத்தல் என் மனதில் உண்டாகியது. இரண்டு நாட்களுக்கு பிறகு என்னுள் ஒரு கேள்வி எழுந்தாது, அது வேறு ஒன்றும் இல்லங்க...
"
நமக்கு ஏன் ஒரு பொன்னும் செட்டாக மட்டங்குது?"
அதற்க்கான விடை நான் சொல்லியா உங்களுக்கு தெரியனும் ?...
"
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்..."

சுபம் ...........................

Tuesday, March 1, 2011

ஏக் (एक) பிரியாணி

பொதுவாக எல்லோரும் பேருந்தில் சில சுவாரஸ்யமான சம்பவங்கள், நமக்கு நடந்த சில நிகழ்வுகளை ஞாபகப்படுத்தும். இந்த 'ஏக் பிரியாணி' என்ற வலைப்பதிவில் நான் ஒவ்வொறுமுறையும் பேருந்தில் பயணிக்கும்போதும் வடநாட்டவர்கள் அவர்கள் மொழியில் 'ஏக் டிக்கெட்' என்று கேட்கும் பொழுது என் முகத்தில் ஒரு சிறு புன்னகை மலறும் அதற்க்கு காரணம் என் நண்பனுக்கு நடந்த ஒரு நிகழ்வு. என் நண்பனுக்கு நடந்த சம்பவத்தை இந்த 'ஏக் பிரியாணி' என்னும் வலைப்பதிவில் பதித்துள்ளேன். இந்த நிகழ்வை பற்றி கூறுவதற்குமுன்னால் என் நண்பனிடமிருந்து பதிப்புரிமை வாங்கிய பின்னே இந்த வலைப்பதிவை வெளியிடுகிறேன்.

என் நண்பனுக்கு கான்பூரிளிருந்து நேர்முகத்தேர்வுக்கான அழைப்பிதழ் வந்திருந்தது. கான்பூர் உத்தர்பிரதேஷ் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். என் நன்பம் தமிழ்நாட்டை தாண்டி எங்கும் பயணித்ததில்லை. அவனுக்கு வேறுமொழிதெரியாத இடத்திற்கு எப்படி போவது என்ற தயக்கம் இருந்தது. இருப்பினும் அவன் இணையதளத்தின் முலம் பயணச்சீட்டை முன்பதிவு செய்து அவன் பயணத்தை ஆரம்பித்தான். என் நண்பன் அவன் மீது அளவுகடந்த தன்னம்பிக்கை வைத்திருப்பான். ஒரு வழியாக நேர்முகத்தேர்வை முடித்துவிட்டு அன்று இரவு ரயிலில் பயணத்தை தொடங்கினான். இரவு சுமார் 8:30 மணியளவில் பசிஎடுத்தது. அவன் ரயிலில் உள்ள (Pantry) உணவு கூடத்திற்கு சென்று என்னென்ன உணவு உள்ளது என்று உணவு கூடத்தில் ஒட்டப்பட்டிருக்கும் உணவு மற்றும் அதன் விலை பட்டியலை பார்த்து விட்டு 'ஏக் (एक) பிரியாணி' என்று இந்த்தியில் கேட்டான். அந்த வியாபாரி ஒரு பொட்டலத்தை கொடுத்துவிட்டு 40 ரூபாவை பெற்றுகொண்டான். இவனுக்கு ஒரு சந்தேகம், அந்த விலை பட்டியாலில் ஒரு பிரியாணி பார்சல் ரூபாய் 35 என்று அச்சடிக்கப்பட்டிருந்தது. இவன் நம்மிடம் 40 ரூபாய் வாங்கிவிடானே என்று ஏக்கத்தோடு தன் இருக்கைக்கு சென்று பொட்டலத்தை பார்த்தால்! என் நண்பனுக்கு அந்த வியாபாரி 40 ரூபாய் வாங்கியதற்கான விடை கிடைத்தது. அது வேறொன்றும் இல்லை என் நண்பன் வியாபாரியிடம் "ஏக் (एक) (தமிழில் 'ஒரு') பிரியாணி" என்று கேட்டது அவனுக்கு "எக் (egg) (தமிழில் 'முட்டை') பிரியாணின்னு" கேட்டுவிட்டது. அதனால் அந்த வியாபாரி 'எக் (egg) பிரியாணி' ஒரு பொட்டணத்தை எடுதுக்கொடுத்துவிட்டன். அதையும் சாப்பிட்டுவிட்டு சென்னைக்கு வெற்றிகரமாக திரும்பியாதும் எங்களிடம் இந்த நிகழ்வை சொன்னபோது நங்கள் விழுந்து விழுந்து சிரித்தோம். இந்த வலைப்பதிவை படிக்கும் பொது நீங்கள் விழுந்து விழுந்து சிரிக்காட்டாலும், உங்கள் முகத்தில் சிறு பொன்னகை பூக்கும் என்ற நம்பிக்கையில் இந்த வலைப்பதிவை முடிக்கிறேன்.

இந்த வலைப்பதிவை முடிக்கும் பொழுது என்னக்கு 'பாஸ் (எ) பாஸ்கரன்' படத்தில் சந்தானம் செய்த நகைச்சுவை நினைவில் தொன்றியாது. அந்த படத்தில் ஆர்யா நயன்தாராவிடம் எதாவது சொல்லும்போது அவள் ஆங்கிலத்தில் படன் (pardon) என்று சொல்லுவால் அவனுக்கு pardon க்கு அர்த்தம் தெரியாது. ஆர்யா உடனே சந்தானத்திடம் pardon க்கு அர்த்தம் சொல்லுடா என்று தொந்தரவு செய்வான், அதற்க்கு சந்தானம் உன்னைய பாடசொல்லுராடா என்று தப்பாக சொல்லி அனுப்பிவிடுவான். அதை நம்பி, நயன்தாரா ஆங்கிலத்தில் படன் (pardon) என்று சொன்னதும் ஆர்யா சினிமா பாட்டு பாடி அவமானப்பட்டுவிடுவான். கடைசியில் சந்தானத்திற்கு உண்மைதேரியவந்ததும் அவன் சொல்லும் வசனம் (i think she speaks British english)

அதேப்போல் என் நண்பனும் கான்பூர் இந்தி பேசி இருப்பானோ?

Tuesday, February 22, 2011

பெயர்க்காரணம்


பல மதாங்களுக்கு பிறகு இந்த வலைப்பதிவை தொடங்கும் முயற்சியாக 'பெயர்க்காரணம்' என்னும் தலைப்பில் எழுதியுள்ளேன். எல்லோருக்கும் பிறந்த சில நாட்களிலே பெயர் சூட்டுவார்கள். அப்படி சூட்டப்படும் பெயருக்கு கண்டிப்பாக ஒரு காரணமிருக்கும். அப்பெயர்காரத்தை மையமாக கொண்டு என் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை இந்த வலைப்பதிவில் எழுதியுள்ளேன்.

என் பெயரோ இளஞ்செழியன், அழகான தமிழ் பெயர். சிறுவயதிலிருந்தே நண்பர்கள் ஆசிரியர்கள் மற்றும் பலர் என்னிடம் கேட்கும் கேள்வி," உன்பெயரின் அர்த்தம் என்ன அல்லது எதற்க்காக உனக்கு இந்த பெயர் வைத்தார்கள்". அப்பொழுது என்னால் முடிந்த ஒரே பதில் புன்னகை மட்டும்தான். நான் முன்றாம் வகுப்பில், தமிழ் புத்தகத்தில் முன்றாம் பாடத்தில் காவடி ஆட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் பற்றி இருந்தது. அதில் 'செழிய' என்றால் 'பாண்டிய' என்று அருஞ்சொற்பொருளில் படித்து நினைவில் இருந்தது. இருப்பினும் சிரிப்பை மட்டும் தான் பதிலாக வைத்திருந்தேன். பின்னர் கல்லூரியிலும் என் நண்பர்கள் கேட்டதற்கு தெரியவில்லை என்றதும், டேய் பாண்டிய மன்னர்கள் சங்கம் வைத்து தமிழை வளர்த்தார்கள், இவங்க அப்பாவால முடியாது, அவருக்கு தெரியும் இவனவைத்து ஒன்றும் செய்யமுடியாது அதனாலவோ என்னவோ இவன் பெயர்லயாவது தமிழ் பெயர் இருக்கட்டும்னு இந்த பெயரை வைத்திருப்பார் என்று கேலி செய்தார்கள்.

என் அப்பாவிடம் கேட்டேன் எதற்காக இந்த பெயரை வைத்தீர்கள் என்று கேட்டேன். உறவினர்கள் எல்லோரும் தன் முதாதையரின் பெயர் அல்லது குலதெய்வத்தின் பெயரை வைப்பதுதானே வழக்கம். அப்படி இறுக்க ஏன் இந்த பெயரை வைத்தீர்கள் என்று கேட்டதற்கு அவர் கூறிய பதில் எனக்கு அதிர்ச்சியை தந்தது. அது வேறொன்றும் இல்லங்க என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தமிழ் நாவல் படிக்கும் பழக்கம் உண்டு. அவங்க படித்த சாண்டில்யன் எழுதிய யவனராணி நாவலில் சோழ மன்னனின் கிழக்கு போர்ப்படையின் தளபதியின் பெயர் இளஞ்செழியன். இந்த நாவலில் அவன் செய்த நம்பமுடியாத சாகசத்தையும் பின்னர் சோழநாட்டின் தலைமை தளபதியாகுவதுதான் இந்த நாவலின் கதை. நீயும் இளஞ்செழியன் மாதிரி சிறந்து விளங்கவேண்டும்னு உனக்கு இந்த பெயரை வைத்தேன்டா என்று சொன்னார், அவர் அப்படி சொல்லும்போது அவர்முகத்தில் ஒரு ஏக்கம் தெரிந்தது (ஏன்டா இந்த பெயரை இவனுக்கு வைத்தொம்னு ).

என் அப்பாவுக்கு ஆங்கிலத்தில் இளன் என்றால் வேகம், ஆர்வம் என்று பொருள் உண்டுன்னு தெரியாது, தெரிந்தால் இன்னும் வருத்தப்பட்டிருப்பார். என் தந்தையின் ஏக்கம் மற்றும் வருத்தத்தை போக்கி இளஞ்செழியன் என்ற பெயரை எனக்கு பொருத்தமானதாக ஆக்குவேன் என்ற நப்பிக்கையுடன் இந்த வலைப்பதிவை முடிக்கிறேன்.