பல
மதாங்களுக்கு பிறகு மீண்டும் இந்த வலைப்பதிவை தொடங்கும் முயற்சியாக
'விருட்சம்' என்னும் தலைப்பில் எழுதியுள்ளேன்.
நானும் என் நண்பனும் மகாபலிபுரத்திற்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தோம், நேரம் 11:30, உச்சி வெயில் கடுமையாக இருந்தது. வாகனம் ஓட்டுவதற்கு கடினமாக இருந்தது. வெகு துரத்துக்கு எந்த ஒரு சின்ன மரத்தையும் பார்க்க முடியவில்லை. வெகு நேரம் கழித்து, ஒரு பெரிய புளியமரம் தென்பட்டது. ஒரு வழியாக ஒய்வு எடுப்பதற்கு மரம் கிடைத்தது என்று மனதில் சிறு சந்தோசமும், முகத்தில் சிறு புத்துணர்ச்சி துளிர்விட்டது. வேகமாக சென்று ரோட்டோரம் உள்ள மரத்தடியில் நிறுத்தினோம். சிலு சிலு குளிர்ந்த காற்று எங்களை வருடி சென்றது. இந்த காற்றில் உள்ள சுகம், எந்த ஒரு குளிர் சாதனத்திலும் நான் அனுபவித்ததில்லை. குளிர்ந்த காற்று அந்த மரத்தை சுற்றிதான் உணரமுடிந்தது, அதை விட்டு பத்து அடி தூரம் விலகி நின்றால் குளிர்ந்த காற்றை உணரமுடியவில்லை, காற்று சற்று சூடாக உணர்ந்தேன். திடிரென்று காற்று வேகமாக அடித்தது, சட்டென்று சிறு சிறு இலைகள் எங்கள் இருவர் மேல விழ ஆரம்பித்தது. அது யாரோ எங்கள் மேல் பூ தூவுவது போல் உணர்ந்தேன். 10 நிமிடங்கள் கழித்து எங்கள் பயணத்தை ஆரம்பித்தோம். அம்மரத்தை விட்டு சில தூரம் கடந்த பின்புதான் எனக்கு "நிழலின் அருமை வெயிலிலே தெரியும்" என்ற பழமொழி என் நினைவில் பொறி தட்டியது. அதன் அருமை தெரிந்தது.

முந்தைய பத்தி தட்டச்சி செய்து முடிக்கும் பொது தான் எனக்குக், தேவர் மகன் படத்தில் சிவாஜி-கமல் வசனம் நினைவுக்கு வந்தது. அது
"இன்னைக்கு நான் வெதைகெரென்,
நாளைக்கு நீ சாப்புடுவ
பிரவு உன் மகன் சாப்புடுவான்
அப்பறம் அவன் மகன்.
ஆனா..., வெத...?
நான் போட்டது !
இதெல்லம் என்ன பெருமையா...?
கடம... ஒவ்வொருத்தனோட கடம!"
அடுத்து
வரும் தலைமுறைக்கு வாழ்வதற்கு செல்வம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.
சுவாசிக்க மரங்கள் மூலம் காற்றையாவது விட்டு வைத்து செல்வோம். எந்த ஒரு
பிரதிபலனை எதிர்பார்க்காமல் உதவும் மரங்களை காப்போம். எல்லா மரத்தையும்
காக்க முடியாவிட்டாலும், நம் விட்டின் அருகில் உள்ள மரங்கள், சொந்த
வயல்களில் உள்ள மரத்தையாவது காப்போம்.
உலகிலே எல்லோராலும் இலவசமாக கொடுக்கிற இரண்டு விஷயம், வாக்குறுதி
மற்றொன்று அட்வைஸ். நான் மட்டும் அதற்க்கு விதிவிலக்கா என்ன....?
விருட்சத்தின் பொருள் (விருட்சம்)